spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவயநாட்டில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!

வயநாட்டில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!

-

- Advertisement -

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

we-r-hiring

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரி வேட்பாளர் சத்தியன் மொக்கேரி, பாஜக வேட்பளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!
File Photo

இதில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறார். சற்று முன்பு வரை பிரியங்கா காந்தி, கம்யுனிஸ்ட் வேட்பாளர் சத்யனை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் நவ்யா 3வது இடத்தில் தொடருகிறார். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை பிரியங்கா காந்தி பெற உள்ளார். இதனிடையே, பாலக்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் முன்னிலை வகித்து வருகிறார்.

 

 

MUST READ