தந்தை பெரியார் குறித்து ஆதாரம் அற்ற தகவலை கூறிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஆதாரத்தை கேட்பதற்காக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நெல்லித்தோப்பு சிக்கல் அருகே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் சீமான் பங்கேற்க உள்ள கட்சி கூட்டம் நடைபெறும் திருமணம் மண்டபம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்து கண்டன கோஷம் எழுப்பினர். நெல்லித்தோப்பு சிக்னல் அருகே அமைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி கொடியை பிடுங்கி எறிந்து தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் ஆவேசம். நெல்லித்தோப்பு சிக்னல் அருகே தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மறியலில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.