
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு இடங்களிலும் 100- க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலமாக மழைப் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரவு முதல் விடியற்காலை வரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சாலையில் விழுந்துக் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
நகரின் மையப்பகுதியில் உள்ள சட்டமன்ற வளாகப் பகுதியில் இருந்த மிக உயரமான பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் சட்டமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பெயர் பலகைச் சேதமடைந்தன. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.