மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் – ராஜ்நாத் சிங்
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்ததை அடுத்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 2வது நாளாக மக்களவை முடங்கிய நிலையில், அவையில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவையை முடக்குகின்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு விரும்புகிறது. ஆனால் மணிப்பூர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க விடாமல் சில கட்சிகள் தடுக்கின்றன. மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் நாடு வெட்கப்படுவதாகவும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியே கூறினார்” என்றார்.
இதனிடையே இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.