Homeசெய்திகள்இந்தியா'அயோத்தி ராமர்கோயில்'- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

-

 

'அயோத்தி ராமர்கோயில்'- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
Photo: Minister Amit Shah

அயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்திற்கு காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5% குறைப்பு!

மத்தியப்பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அயோத்தியில் ராமர்கோயில் திறப்பை நாம் தீபாவளியாகக் கொண்டாடவிருக்கிறோம். மத்தியப் பிரதேசம் மாநில மக்கள் மட்டும் தீபாவளி பண்டிகையை வரும் மாதங்களில் மூன்று முறை கொண்டாட இருக்கின்றனர்.

அடுத்த மாதம் வரும் தீபாவளி முதல் முறையும், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் போது, 2-வது முறையும், அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறக்கும் போது, 3-வது முறையும் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவுள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து, முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?”- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

அயோத்திக்கு ஒருமுறை ராகுல் காந்தி சென்று வர வேண்டும் ஏன் தான் அறிவுரை வழங்குவதாகக் கூறினார்.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசம் மாநிலத்திற்கு வரும் நவம்பர் 17- ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ