பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த உணவகம் நாடு முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் யார் என்று நெட்டிசன்கள் தேடி வரும் நிலையில், உணவகத்தின் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!
தமிழகத்தில் ஆன்மீக நகரங்களின் ஒன்றான ராமேஸ்வரம் என்ற பெயரை வைத்திருந்தாலும், பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவின் உரிமையாளர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. பெங்களூருவைச் சேர்ந்த ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா தம்பதியரே, ராமேஸ்வரம் கஃபேவின் உரிமையாளர்கள். மெக்கானிக்கல் இன்ஜினியரான ராகவேந்திர ராவும், கணக்காளருமான திவ்யாவும் தொழிலில் பாட்னர்களாக இணைந்து, பின்னர் வாழ்க்கை துணையாக மாறி, கடந்த 2021- ஆம் ஆண்டு ராமேஸ்வரம் கஃபேயைத் தொடங்கியுள்ளனர்.
மது போதையில் தாயை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற மகன்!
முன்னாள் குடியரசுத் தலைவரும், ராக்கெட் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் மீது கொண்ட பற்றுக் காரணமாக, தங்கள் கஃபேவிற்கு ராமேஸ்வரம் கஃபே என்று பெயர் சூட்டியுள்ளனர். அப்துல் கலாமின் சொந்த ஊர் ராமேஸ்வரம் என்பதால் அந்த பெயரிலேயே தங்கள் உணவகத்தைத் தொடங்கியிருப்பதாகவும் ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா தம்பதியினர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.