spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

-

- Advertisement -

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாக தொடர்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்றும் தெரிவித்தார்.

we-r-hiring

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீட்டுக்கடன், தனிநபர்
கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே தொடரும். இதனிடை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து 10வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி 6.5 சதவிகிதமாக தொடர்வது குறிப்பிடத்தக்கது.

MUST READ