Homeசெய்திகள்இந்தியா'சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள குங்குமப்பூ'- விரிவான தகவல்!

‘சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள குங்குமப்பூ’- விரிவான தகவல்!

-

 

'சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள குங்குமப்பூ'- விரிவான தகவல்!
File Photo

காஷ்மீரின் சிவப்புத் தங்கம் என்றழைக்கப்படும் குங்குமப்பூவின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.

மாணவர்களிடையே சாதி மோதலை தவிர்க்க ஒருநபர் ஆணையம் அமைப்பு

இனிப்புகளின் தனித்தன்மையை வெளிப்படுவது மட்டுமல்ல, பனிமலைகள் நிறைந்த காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சி, அம்மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிச் செய்வது ஆகியவற்றிற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இங்கு விளையும் குங்குமப்பூ.

நறுமணமும், மருத்துவக் குணமும் நிறைந்த காஷ்மீரின் குங்குமப்பூவிற்கு சர்வதேச அளவில் தனி மவுசு தான். சமீப காலமாக, காஷ்மீரின் குங்குமப்பூவின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடப்பாண்டில் மட்டும் குங்குமப்பூவின் விலை 64% உயர்ந்து, ஒரு கிலோ 3 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது.

திடீரென விலை இவ்வளவு அதிகரிக்க என்ன காரணம்? குறிப்பிட்ட பகுதியில் விளையும் (அல்லது) உற்பத்திச் செய்யப்படும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படுவதை நாம் பார்க்கிறோம். புவிசார் குறியீடு பெற முக்கிய காரணம், உலகச் சந்தையில் அந்த பொருளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது தான்.

அந்த வகையில், காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெறப்பட்ட பிறகு, அதன் விலை அதிகமாகவே இருக்கிறது என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள். குங்குமப்பூ செடிகளில் பூக்கும் ஊதா நிற பூக்களின் சூலகத் தண்டு தான், நறுமணம் வீசும் குங்குமப்பூவாகச் சேகரிக்கப்படுகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

ஆண்டுக்கு ஆறு வாரங்கள் மட்டுமே பூக்கும் இந்த ஊதா நிற பூ ஒவ்வொன்றிலும் இரண்டு முதல் நான்கு சூலகத் தண்டுகள் மட்டுமே இருக்கும். சுமார் 1.5 லட்சம் பூக்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூவை உற்பத்திச் செய்ய முடியும் என்று கூறும் விவசாயிகள், காலநிலை மாற்றம் காரணமாக, இவற்றைச் சாகுபடி செய்து உற்பத்திச் செய்ய அதிக செலவு ஆவதும் விலை அதிகரிக்க காரணம் என்கின்றனர்.

ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் குங்குமப்பூ விளைவிக்கப்பட்டாலும், புவிசார் குறியீடு பெற்றவை காஷ்மீர் குங்குமப்பூக்கள் தான். கனடா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகளும் இந்தியாவில் இருந்து குங்குமப்பூவை இறக்குமதிச் செய்கின்றன.

MUST READ