Homeசெய்திகள்இந்தியாசமாஜ்வாதி எடுத்த அதிரடி முடிவு....காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி!

சமாஜ்வாதி எடுத்த அதிரடி முடிவு….காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி!

-

 

சமாஜ்வாதி எடுத்த அதிரடி முடிவு....காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி!
File Photo

ஆளும் கூட்டணியில் இருந்து 4 அல்லது 5 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சேரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், மத்திய பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என சமாஜ்வாதி கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை!

ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து 4 அல்லது 5 கட்சிகள் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சேரும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அலோக் சர்மா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற 38 கட்சிகளில் 4 முதல் 5 கட்சிகள் தங்கள் அணிக்கு வருவது தொடர்பாக பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் இரண்டு வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. இதோடு சேர்த்து அக்கட்சி ஆறு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 230 தொகுதிகளிலும் போட்டியிட கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் ராமாயண் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்…..பெண்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் பா.ஜ.க.!

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கும் திட்டம் இல்லை என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் களமிறங்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சிகளாக காங்கிரஸும், சமாஜ்வாதியும் திகழும் நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் மத்திய பிரதேச தேர்தலில் இந்த கட்சிகள் ஒன்றையொன்றை எதிர்த்துப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் அறிவிப்பால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

MUST READ