spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசமூக அக்கறை நிறைந்த நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நிறுவனம் எது தெரியுமா?

சமூக அக்கறை நிறைந்த நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நிறுவனம் எது தெரியுமா?

-

- Advertisement -

 


சமூக அக்கறை நிறைந்த இந்திய கார்பரேட் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தில் உள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

சமூக பொருளாதார பிரச்சனைகள் குறித்து ஆய்வுச் செய்யும் SKOCH என்ற ஆய்வு நிறுவனம், ஆறு மாதங்களாக ஒவ்வொரு நிறுவனத்தின் செயல்பாடுகளிலும் 231 காரணிகளை ஆய்வுச் செய்ததாகத் தெரிவித்திருக்கிறது. அதன்படி, சமூக அக்கறை நிறைந்த இந்திய நிறுவனத்தின் வரிசையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தில் உள்ளதாக SKOCH தெரிவித்துள்ளது.

இதற்கு இந்நிறுவனத்தின் திட்டங்கள், எதிர்கால இலக்குகள், சாதனைகள் அனைத்துமே எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்காக உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக, ரிலையன்ஸ் பவுண்டேசன் மூலமாக சுமார் 54,000 கிராமங்களில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலிவர் 2-வது இடத்திலும், அதானி குழுமம் 3- வது இடத்திலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சமூக அக்கறை நிறைந்த முதல் 20 நிறுவனங்களில் ஜியோ, லூபின் ஹெரிடேஜ், பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளனர்.

MUST READ