Homeசெய்திகள்இந்தியாஇஓஎஸ் - 08  செயற்கைக்கோள்   வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஓஎஸ் – 08  செயற்கைக்கோள்   வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

-

இஓஎஸ் - 08  செயற்கைக்கோள்   வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஓஎஸ் – 08  செயற்கைக்கோள்   வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இஓஎஸ்-08  புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ.தொலைவில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் (SiC UVDosimeter) ஆகிய 3 ஆய்வுசாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவிசெய்யும்.

இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கம்

ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோம்நாத் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது அந்த செயற்கைக்கோள் அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளன. தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் சிறப்பாக செயல்படும். இதற்கான உழைப்பைச் செலுத்திய எஸ்எஸ்எல்வி டி-3 குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் இது மூன்றாவது உந்து வாகனம், இன்றைய வெற்றி மூலம் எஸ்எஸ்எல்வி வளர்ச்சி நிறைவுபெற்றது என்று அறிவிக்கலாம்.” என்றார்.

MUST READ