

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!
புதுச்சேரி சோலைநகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த நிலையில், கால்வாயில் இருந்து உடலை மீட்டனர் காவல்துறையினர். வழக்குப்பதிவுச் செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, 57 வயது நபர், 19 வயது இளைஞர் என இருவரை புதுச்சேரி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள், தலைவர்களின் அஞ்சலிக்கு பிறகு சிறுமியின் இறுதி ஊர்வலம், முத்தியால்பேட்டையில் தொடங்கியது.
தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ அதிரடி..!!
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சிறுமி பயன்படுத்திய பொம்மைகள், பை, புத்தகம் இறுதி ஊர்வலத்தில் தொங்க விடப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி மாநில டி.ஜி.பி., டி.ஐ.ஜி. ஆகியோருடன் துணைநிலை ஆளுநர் டாக்டர் சௌந்தரராஜன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.


