மகாராஷ்டிராவில் மகனை வாளால் வெட்ட வந்த இளைஞர்களை, தாயார் கற்களை வீசி விரட்டியடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஜால்னாபுர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தயாருடன் இருசக்கர வாகனத்தில் நின்று பேசிக கொண்டிருந்தார். அப்போது அஙகு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து, இளைஞரை வெட்ட முயன்றனர். இதனை கவனித்த அந்த இளைஞர் சட்டென வாகனத்தில் இருந்து இறங்கி உயிர் தப்பினார்.
அப்போது, அந்த இளைஞரின் தாயார் துணிச்சலுடன் தாக்குதல் நடத்திய நபர்களை எதிர்த்து தாக்கினார். மேலும் அருகில் கிடந்த கற்களை எடுத்து அவர்கள் மீது வீசி விரட்டியடித்தார். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட இளைஞருடன் தகராறு
ஏற்பட்டதால் அவரை தாக்க முற்பட்டது தெரியவந்துள்ளது.