spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும், இல்லையன்றால் மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் - AI...

இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும், இல்லையன்றால் மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் – AI குறித்து ஏஆர் ரஹ்மான் பேட்டி

-

- Advertisement -

இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும், இல்லையன்றால் மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் - AI குறித்து ஏஆர் ரஹ்மான் பேட்டி

செயற்கை நுண்ணறிவை (AI) தவறாகப் பயன்படுத்துவது ‘பெரிய ஆபத்து” என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.

we-r-hiring

ரஹ்மான் பாடல் ரீமிக்ஸ் மற்றும் மறுகற்பனைகள் பற்றி விவாதித்த போது, The Week இதழுக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார். அதில் “இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும்…இல்லையன்றால் மக்கள் வேலை இழக்க நேரிடலாம் என்று கூறினார். “AI ஒரு செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.  ஆனால் ஒரு ட்யூனை இசையமைக்க  “மனித இதயம் மற்றும் தத்துவ மனம்” தேவை என்று கூறி இருக்கிறார்.

பல படைப்பாளிகள் AI கருவிகளைப் பயன்படுத்தி வெவ்வேறு பாடகர்களின் குரல்களில் பல்வேறு பாடல்களை மீண்டும் உருவாக்கி, நெறிமுறைகள் மற்றும் பதிப்புரிமை மற்றும் படைப்பு உரிமை பற்றிய கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் தான்  AI- ன் நன்மைகளை ஒப்புக்கொள்வதாகவும்  தெரிவித்துள்ளார்.

ரஹ்மானின் AI வரலாறு

லால் சலாமில் திமிரி ஏழுடா பாடலுக்கு மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோரின் குரல்களை மீண்டும் உருவாக்க ரஹ்மான் AI ஐப் பயன்படுத்தியதாக பகிரிந்துள்ளார். அதை தொடங்குவதற்கு முன்பாக பாடகர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அனுமதி கோரியதாகவும், அதற்கான ஊதியம் அனுப்பப்பட்டதாகவும் இசையமைப்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடனம் எனக்கு பிடிக்கும்…. ‘புஷ்பா 2’ படத்திற்காக காத்திருக்கிறேன்…. சூர்யா பேச்சு!

MUST READ