Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி லட்டு விவகாரம் : ஏ.ஆர். டெயிரி நிறுவனம் அளித்த விளக்கம்

திருப்பதி லட்டு விவகாரம் : ஏ.ஆர். டெயிரி நிறுவனம் அளித்த விளக்கம்

-

- Advertisement -

திருப்பதி லட்டு விவகாரம் : ஏ.ஆர். டெயிரி நிறுவனம் அளித்த விளக்கம்திருப்பதி பெருமாள் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கொழுப்பு இருப்பதை மத்திய அரசின் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட ஏ.ஆர். டெயிரி நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாத்தில் நெய் சப்பிளை செய்துள்ளனர். இந்த இரண்டு மாதங்கள்வரை தொடர்ச்சியாகச் சப்பிளை செய்துள்ளனர். அதன் பின் தேவஸ்தானத்திற்கு ஏ.ஆர். டெயிரி-ன் நெய் சப்பிளை செய்யப்படவில்லையென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ”தற்போது ஏ.ஆர்.டெயிரி நிறுவனம் பெயரைப் பயன்படுத்தி ரிப்போர்ட் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

திருப்பதி லட்டுவில் கலக்கப்பட்ட பொருள்கள்

எங்களது தயாரிப்புகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பரிசோதனை செய்து அதன் தன்மையினை தெரிந்து கொள்ளலாம்.

அதே மாதிரி இந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஏ.ஆர் டெய்ரி மட்டுமில்லாமல் பல்வேறு நிறுவனங்கள் திருப்பதிக்கு நெய் அனுப்பியுள்ளன.

25 ஆண்டு காலமாக இத்துறை நாங்கள் இருக்கிறோம். எங்களுடைய மொத்த தாயரிப்பில் 0.5% தான் தேவஸ்தானத்துக்கு அனுப்பியுள்ளோம். இதுவரை திருப்பதி கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்தக் குறைபாடும் இல்லை. நீங்கள் எங்களுடைய மாதிரிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். எங்களிடம் மாதிரி அறிக்கைகள் (lab report) உள்ளது. தேவஸ்தானத்துக்கு அனுப்பும்போது மாதிரி அறிக்கையுடன் தான் அனுப்பியுள்ளோம் என ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ