Homeசெய்திகள்இந்தியாரயில் விபத்தில் காணாமல் போன மகன்.... தேடி அலைந்த பாசக்காரத் தந்தை!

ரயில் விபத்தில் காணாமல் போன மகன்…. தேடி அலைந்த பாசக்காரத் தந்தை!

-

 

ரயில் விபத்தில் காணாமல் போன மகன்.... தேடி அலைந்த பாசக்காரத் தந்தை!
Photo: NDRF

ஒடிஷா ரயில் விபத்தில் காணாமல் போன மகனை உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் தந்தை தேடி வீடியோ காண்போரைக் கண் கலங்க வைத்தது.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரை அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் சிதைந்துள்ளது. இந்த நிலையில், விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தனது மகனைத் தேடி தந்தை ஒருவர் அலைந்துள்ளார். இறந்த நிலையிலாவது தனது மகனை பார்த்து விட வேண்டும் என்ற ஏக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் பிள்ளையைத் தேடிய தந்தையின் பாசம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில் சுமார் 280- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 700- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் விடிய, விடிய நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ