spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமத்திய அமைச்சரவையில் மாற்றம்!

மத்திய அமைச்சரவையில் மாற்றம்!

-

- Advertisement -

 

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

அண்மையில் நடந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.

we-r-hiring

நகங்களை பராமரிக்க இதை செய்யுங்கள்!

அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவிற்கு, வேளாண் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜல்சக்தித் துறையை மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூடுதலாக வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண்துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேவிடம், உணவுப் பதப்படுத்தல் தொழில்துறையும், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பவாரிடம், பழங்குடியினர் நலத்துறையும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகைச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதம் பட்டையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் மட்டுமின்றி மேலும், ஒன்பது பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அவர்களது ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

MUST READ