Homeசெய்திகள்இந்தியாவெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

-

 

வெங்காயம் ஏற்றுமதிக்கு வரி விதித்து மத்திய அரசு மத்திய அரசு அதிரடி!
File Photo

விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்யவிருப்பதாக மத்திய அரசுத் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

நிலவில் விழுந்து நொறுங்கியது ரஷ்யாவின் லூனா!

வெங்காயத்தின் விலை உயர்வைத் தடுக்கும் விதமாக, கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு, 3 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்தது. அதன் தொடர்ச்சியாக, வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த நிலையில், முன்னேப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5 லட்சம் டன்னாக உயர்த்தும் விதமாகக் கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்யவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கைது!

மேலும், கொள்முதல் செய்து வெங்காயத்தின் இருப்பை முக்கிய நுகர்வு மையங்களில் அளவீடு செய்து விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு மலிவு விலையில் வெங்காயம் தொடர்ந்து கிடைப்பதை உறுதிச் செய்ய முடியும் என்றும், விவசாயிகளுக்கும் பலனளிக்கும் என்றும், மத்திய நுகர்வோர் விவகாரத்தைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ