ரஷ்யா அனுப்பிய லூனா- 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேடிஎம் 390 பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம்
நிலவின் தென்துருவத்தை ஆய்வுச் செய்வதற்காக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று லூனா- 25 விண்கலத்தை விண்ணில் செலுத்தியிருந்தது. ஆகஸ்ட் 23- ஆம் தேதி லூனா- 25 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
“நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்”-இஸ்ரோ அறிவிப்பு!
இந்த நிலையில், லூனா- 25 விண்கலத்தை விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லூனா- 25 விண்கலம் தொடர்பை இழந்த நிலையில், இணைப்பை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட லூனா- 25 விண்கலத் திட்டம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லூனா- 25 விண்கலம் விழுந்து நொறுங்கியது ஏன்?
உந்து விசை அமைப்பில் மாற்றம் செய்த போது, ஏற்பட்ட விலகல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. லூனா- 25 விண்கலத்தின் கடைசி சுற்று வட்டப்பாதையைக் குறைக்கும் போது, சிக்கல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடிக்கு ஓட்டுப்போட்ட விரலை துண்டித்த சகோதரர் – அண்ணன் தற்கொலையை விசாரிக்காததால் விரக்தி
விண்கலத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இறுதிக்கட்ட சுற்றுப்பாதையைக் குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.