
வந்தே பாரத் ரயில் கட்டணத்தை 10% வரை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!
இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, மும்பை, வாரணாசி, புவனேஸ்வர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிநவீன வசதிகள், பயண நேரம் குறைவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வந்தே பாரத் ரயிலில் உள்ள போதிலும், பயண கட்டணம் அதிகமாக இருப்பதால், குறைவான எண்ணிக்கையிலே மக்கள் பயணிக்கின்றனர்.
“நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் கட்டணங்களை 10% வரை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் கட்டணங்கள் குறைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ரயில்வே வாரியம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.