- Advertisement -

காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும் என கன்னட சலவழி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

மழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த வாட்டாள் நாகராஜ், “பெங்களூருவில் பல ஆண்டு காலமாக ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டாமா? வேண்டாமென்றால் தமிழ் மக்களை மீண்டும் தமிழ்நாட்டுக்கே அழைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் மீண்டும் கர்நாடகா பக்கம் கால் வைக்கக் கூடாது.
உடல்உறுப்பு தானம் செய்த அருட்தந்தை உடலுக்கு அரசு மரியாதை
நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா பக்கம் நிற்கிறாரா? அல்லது தமிழ்நாடு பக்கம் நிற்கிறாரா? என்பதைத் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


