spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

மழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

-

- Advertisement -

மழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

kerala orange alert

மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழச்சி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு பருவமழை 3 நாட்களில் முழுமையாக விலகத் தொடங்கும் என்றும், இதன் எதிரொலியால் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

we-r-hiring

கேரளாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ