spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு - இருவர்  கைது

ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு – இருவர்  கைது

-

- Advertisement -

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி இருவர்  கைது

ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு - இருவர்  கைதுதெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் நடைபெறும் வாரச்சந்தைகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது.  இதில் சிங்காடிகுண்டா, நந்திநகர், வெங்கடேஸ்வரா காலனி  மட்டுமின்றி, பல பகுதிகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது.

we-r-hiring

ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு - இருவர்  கைதுஇந்நிலையில்  கடந்த வாரம்  மோமோஸ் சாப்பிட்ட சிங்காடிகுண்டா  பகுதியை சேர்ந்த ரேஷ்மா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஐதராபாத்தில் மகன் இறந்ததை தெறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் காத்திருந்த வயதான தம்பதியினர்…!

இதனையடுத்து அவரது மகன் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் மோமோஸ் சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரேஷ்மா இறந்த  சம்பவத்தை அடுத்து  பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் அளித்ததால்  பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிந்து  மோமோஸ் கடை நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

MUST READ