Homeசெய்திகள்இந்தியாமுத்தமிட முயன்ற பெண் - சந்திரபாபு நாயுடு ஷாக் !

முத்தமிட முயன்ற பெண் – சந்திரபாபு நாயுடு ஷாக் !

-

- Advertisement -
kadalkanni

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முத்தமிட முயன்ற பெண், வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முத்தமிட முயன்ற பெண் - பாபு காரு ஸ்டன் !ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  அனகப்பள்ளி நகருக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.

அப்போது பரவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் பூங்குத்துடன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முயன்று இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் பாதுகாவலர்கள் பூச்செண்டு கொடுக்க வந்த பெண்ணை முதல் மந்திரியிடம் நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்ட சந்திரபாபு நாயுடு அந்தப் பெண்ணை விடுவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

முத்தமிட முயன்ற பெண் - பாபு காரு ஸ்டன் !
woman who tried to kiss - Babu Garu Stun! APC NEWS TAMILசந்திரபாபு நாயுடுவிடம் வந்த பெண் தன்னிடம் இருந்த பூங்கொத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது திடீரென சந்திரபாபு நாயுடுவுக்கு அந்த பெண் முத்தம் கொடுக்க பலமுறை முயற்சி செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரபாபு நாயுடு பணிவுடன் மறுப்பு தெரிவித்து பின்னர் பெண்ணை தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளார்.

சந்திரபாபு நாயுடுவை பார்க்க தெலுங்கு தேசம் கட்சியினரும், அவரது ரசிகர்களும் அனகப்பள்ளிக்கு வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

சினிமா ஸ்டார்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே இருப்பார்கள்.அதேபோல  சில அரசியல் தலைவர்களுக்கும் கூட  தனி தொண்டர்கள் இருப்பார்கள். அவர்கள் தங்கள் தலைவருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அப்படியொரு பெண் தொண்டர் தான் சந்திரபாபு நாயுடுவுக்கு முத்தம் கொடுக்க முயன்று இருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு இப்போது Z plus பாதுகாப்பில் இருக்கிறார். கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து அவர் இந்த Z plus பாதுகாப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் இருக்கிறது…… பார்வதி நாயர் பேச்சு!

MUST READ