Homeசெய்திகள்இந்தியாமல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு!

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு!

-

 

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு!
Photo: ANI

மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை வரும் ஜூன் 15- ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்

மத்திய அரசு விடுத்த அழைப்பின் பேரில், டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை நேரில் சந்தித்த மல்யுத்த வீரர்கள், தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “மல்யுத்த வீரர்களின் போராட்டம் வரும் ஜூன் 15- ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஜூன் 15- ஆம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்- க்கு எதிரான வழக்கு விசாரணை முடிவடையும் என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகளின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்”. இவ்வாறு பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்

பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் ஒரு மாதமாக நீடிக்கும், இந்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள், இந்திய விளையாட்டு வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ