Homeசெய்திகள்அரசியல்விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்

விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்

-

- Advertisement -
விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்
விஜய்

நடிகர்கள் கோடு போட்டாலே ரசிகர்கள் ரோடு போட்டு விடுவார்கள். அதிலும் விஜய் ரோடு போடுவதற்கு தயாராகி விட்டதால் சும்மா விடுவார்களா ரசிகர்கள்.
’விரைவில் மதுரையில் மாநாடு’ என்று போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விஜய்யின் வளர்ச்சியை கண்ட அவரது ரசிகர்கள், அவரை அரசியலுக்கு வர வேண்டும் என்கிற நோக்கில் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர். இதை விஜய் தடுக்காமல் ஊக்கப்படுத்தியது அவரின் ரசிகர்களை மேலும் உற்சாகம் அடைய வைத்தது. அந்த உற்சாகத்தில் தான் அவர்கள்
உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி வெற்றிகண்டனர்.

வெற்றி கண்டவர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார் விஜய் . அதன் மூலம் விஜய் அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகளை எடுத்து வந்தார். உள்ளாட்சித்தேர்தலில் தனது ரசிகர்களை விட்டு ஆழம் பார்த்த விஜய் நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக கூட களம் இறங்க வாய்ப்பு இருக்கிறது என்கிற வகையில் தான்
அடுத்தடுத்த அதிரடிகளை காட்டி வருகிறார் விஜய்.

விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்
நடிகர் விஜய்

அம்பேத்கர் உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சொல்லி தனது மன்றத்தினருக்கு அறிவுறுத்தி வந்த விஜய், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒருவேளை மதிய உணவு இலவசமாக வழங்க தனது மன்றத்தினருக்கு உத்தரவிட்டிருந்த விஜய், 234 தொகுதிகள் என்று அறிவித்ததுமே அவர் அரசியலுக்கு வருவதற்கான திட்டமே என்று வெளிப்படையாகவே தெரிந்து விட்டது.

இதற்கு அடுத்தபடியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு வரும் 17ஆம் தேதி சான்றிதழ் உடன் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த இருக்கிறது விஜய் மக்கள் இயக்கம். 234 தொகுதிகளிலும் உள்ள வெற்றி பெற்ற
மாணவ மாணவிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினரால்.

விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்
விஜய்

இதற்கு அடுத்தபடியாக விஜய் விரைவில் கட்சி தொடங்கி மாநாடு நடத்துவார் என்ற பேச்சு இருக்கையில், ’விரைவில் மதுரையில் மாநாடு தளபதியார் அழைக்கிறார்’ என்று அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து விட்டு ஆரம்பித்து விட்டார்கள். மதுரை மாநகர் தளபதி விஜய் தலைமை மக்கள் இயக்கத்தின் சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மக்களாட்சி மலரட்டும் என்கிற தலைப்புடன் இந்த போஸ்டர்கள் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன.

MUST READ