Homeசெய்திகள்இந்தியாஎம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்

எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்

-

எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்

ஆந்திராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் பெண்களை வைத்து ரெக்கார்ட் டான்ஸ் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டான்ஸ்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்ஷியில் எம்எல்ஏ வேணுகோபாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பெண்களை வைத்து நடனங்கள் ஆட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

டான்ஸ்

இந்த நிகழ்வில் உள்ளூர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இளம் பெண்களுடன் இணைந்து பாகுபலியின் மனோகரா போன்ற பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினர்.

இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களே சட்டம் ஒழுங்க கெடுத்துவருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. பிறந்தநாள் விழாவில் குடிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பலரும் போதையில் நடனமாடியது குறிப்பிடதக்கது.

MUST READ