Homeசெய்திகள்தயார் நிலையில் இஸ்ரோ:ஆதித்யா எல்1 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது!!!

தயார் நிலையில் இஸ்ரோ:ஆதித்யா எல்1 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது!!!

-

சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது:

தயார் நிலையில் இஸ்ரோ:ஆதித்யா எல்1 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது!!!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்த தயாராக உள்ளது ஆதித்யா எல்1 விண்கலம்.இதற்கான கவுன்டவுன் நேற்று தொடங்கியது .இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட் விண்ணில் ஏவபட்டவுடன் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். தொடர்ந்து அது பயணித்து பூமியிலிருந்து சுமார் 15லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ரோஞ்சியன் பாயிண்ட் என்ற இடத்தில நிறுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்ய ,மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே விண்கலம் செலுத்தி உள்ள நிலையில் ,இந்த திட்டத்தில் வெற்றி கண்டால் சூரியனை ஆராயும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.

இன்று ஆதித்யா விண்ணில் செலுத்தபடுவதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விண்கலத்தின் மாதிரியை வைத்து வழிபாடுகள் நடத்தினர்.

MUST READ