சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நீலகிரி வரையாடு இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் ஆன்லைன் வழியாக கேரளா வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.மேலும், இந்த நிகழ்ச்சியில் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நீலகிரி வரையாடு முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 140 வாழ்விடப் பகுதிகள் மற்றும் கேரளாவின் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுடன் சேர்ந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.
தற்போது இரண்டாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 14 வனக் கோட்டங்களில், 177 வரையாடு வாழ்விடப் பகுதிகளில் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 24 முதல் 27, நான்கு நாட்களுக்கு நடத்தப்பட்டது. நீலகிரி வரையாடு குட்டிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பிறக்கின்றன. எனவே தாய் மற்றும் குட்டிகள் இரண்டையும் காணும் வகையில் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வகையில் அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதில் கடந்த ஆண்டு விட 21% வரையாடுகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்தாண்டு கணக்கெடுப்பில் 1303 வரையாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன்,
வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தமிழர்களின் வாழ்வியலில் பின்னிப்பிணைந்தது வரையாடு. வரையாடுகளைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. தமிழ்நாடு வனத்துறை மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது. வரையாடு கணக்கெடுப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி. வரையாடுகள் புட்களை மேய்ந்து நீர் வளத்தை பெருக்குகிறது, மண் வளத்தை பாதுகாத்து மழை நீரை சேகரிக்க உருவாகிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஆடுகள், மாடுகளை வைத்து சீமான் போராட்டம் நடத்துவது தேவை இல்லாதது. இந்தியாவில் சிறந்த வனத்துறை நம்முடைய வனத்துறை என்று கூறினார்.
மேலும், மதுரையில் ஒரு வனத்துறை கல்லூரி கொண்டு வர வேண்டும். தென் தமிழ்நாட்டில் ஒரு உயிரியில் பூங்கா அமைக்க கொண்டு வர திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். மலைவாழ் மக்களுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வனப்பகுதிகளில் சாலை அமைக்க முதல்வரிடம் 500 கோடி வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டு உள்ளேன் என்று கூறினாா்.கேரளா வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்திரன் ஆன்லைன் வழியாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த வரையாடு கணக்கெடுப்பு பணிகள் நடந்துள்ளது. திருவனந்தபுரம் முதல் வயநாடு வரை உள்ள பகுதிகளில் இந்த பணிகள் நடந்தது என்று கூறினார். கேரளாவில் 1368 வரையாடுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்றார்.
வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ விழா மேடை பேச்சு
இது போன்ற கணக்கெடுப்பை நடத்துவது எளிது கிடையாது, மிகவும் ஆபத்தான இடத்துக்கு சென்று தான் இந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் இந்த பணி நடந்து உள்ளது. 800க்கும் மேற்பட்டவர்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் பங்கேற்று தற்போது கணக்கெடுப்பு நடந்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் இல்லை என்றால் இது நடந்து இருக்காது. அறிவியல் பூர்வமாக இந்த கணக்கெடுப்பு பணி நடந்து உள்ளது. 3 ஆண்டுக்குள் நாங்கள் மிகப்பெரிய சாதனையை செய்து உள்ளோம். இந்த கணக்கெடுப்பு பணிக்காக 25 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. சத்தியமங்கலம், முதுமலை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் நீலகிரி வரையாடு அதிகம் காணப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஆணவப் படுகொலைகளை கடுமையான சிறப்பு சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் – வைகோ