spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆணவப் படுகொலைகளை கடுமையான சிறப்பு சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் – வைகோ

ஆணவப் படுகொலைகளை கடுமையான சிறப்பு சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் – வைகோ

-

- Advertisement -

ஆணவக் கொலைகள் அதிகரிப்பால், உயர்நீதிமன்றம் வேதனை; சமூகத் தீமைக்கு முற்றுப்புள்ளி எப்போது? என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளாா்.ஆணவப் படுகொலைகளை கடுமையான சிறப்பு சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் – வைகோ மேலும், இதுகுறித்து தனது அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் இறந்தார். தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஆணவக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரியும் ஜெயசூர்யாவின் தந்தை எம்.முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘‘ஜெயசூர்யா, கல்லூரியில் படித்த மாற்று சமுதாய மாணவி ஒருவரை காதலித்து வந்ததால், அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜெயசூர்யாவை மிரட்டி வந்ததாகவும், இதனால் ஜெயசூர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்”என்றும் தெரிவித்திருந்தார்.

we-r-hiring

இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் பி.வேல்முருகன், ‘‘மனுதாரர் தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிப்பதால், இந்த வழக்கு விசாரணையை சி பி சி ஐ டி விசாரணைக்கு மாற்றுகிறேன். வழக்கு தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இரண்டு வாரங்களில் சி பி சி ஐ டியின் வசம் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உண்மையிலேயே ஆணவக்கொலையாக இருந்தாலும் சில நேரங்களில் உண்மை வெளியே வருவதில்லை என வேதனை தெரிவித்து இருக்கிறார்.

கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் – தமிழ்செல்வி தம்பதியரின் மகன் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியது. தற்போது விருத்தாச்சலத்தில் ஜெயசூர்யா என்ற மாணவர் ஆணவக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சி பி சி ஐ டி விசாரணைக்கு மாற்றி உள்ளது. நீதியரசர் வேல்முருகன் அவர்கள் கூறியுள்ளது போல தமிழ்நாட்டில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி தருகிறது.

ஆணவப் படுகொலைகளை கடுமையான சிறப்பு சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் என்று அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. அத்தகைய சட்டங்கள் இன்றியமையாதது என்றாலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சிறப்பு சட்டங்கள் குறைந்த சதவீத அளவு கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை இருப்பதற்கான காரணங்களையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆணவப் படுகொலைகளை நிகழ்த்துவோர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்படும். தூத்துக்குடி கவின் செல்வ கணேஷ், விருத்தாச்சலம் ஜெயசூர்யா போன்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களோடு ஆணவக்கொலை எனும் சமூக தீமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

மோடி செய்த மோசடி வேலை! அதிரவைத்த ராகுல்! ஆக.7ல் ஆப்பு இருக்கு! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல்!

 

MUST READ