spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமோடி செய்த மோசடி வேலை! அதிரவைத்த ராகுல்! ஆக.7ல் ஆப்பு இருக்கு! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல்!

மோடி செய்த மோசடி வேலை! அதிரவைத்த ராகுல்! ஆக.7ல் ஆப்பு இருக்கு! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல்!

-

- Advertisement -

பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கி, தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது இந்த இனத்திற்கான துரோகமில்லையா? என திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் விவகாரம் மற்றும் அதனை இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பதன் முழுமையான பின்னணி குறித்து திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக 6.5 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் இதனை மறுத்து, அரசியலமைப்பு சட்டத்தின்படி வாக்காளர் வசிக்கும் மாநிலத்திலேயே வாக்களிக்க முடியும் என்று கூறியுள்ளது. மக்களை சந்திக்காமல் அவர்களின் வாக்குகளை தாங்குகிற வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி காண வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகத் தெளிவாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விட, எண்ணப்படும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் 70 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விவரங்கள் இன்றுவரை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் சொல்கிறார். அதன் காரணமாக தற்போது நமக்கு வாக்களிக்காத மக்களின் வாக்குகளை நீக்கிவிடலாம் என்று பார்க்கிறார்கள்.

பீகாரில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 6.5 லட்சம் பேர் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது தோராயமாக 6.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் ஒரு சதவீதம் பேர் வெளி மாநில வாக்காளரகள் என்கிறபோது, வெற்றி தோல்வியை முடிவு செய்வதில் அவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். தமிழ்நாட்டில் 70களில் இருந்தே மக்கள் நாடாளுமன்றத்துக்கு தேசிய கட்சிக்கு வாக்களிப்பார்கள். சட்டமன்றத்துக்கு திராவிட கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். இந்த புரிதல் இல்லாமல், வெளிமாநிலத்தில் இருந்து வேலை பார்க்க வருபவர்களுக்கு, எங்களுடைய ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமையை வழங்குவது இந்த இனத்திற்கான துரோகமில்லையா?

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை, மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டிலும் மேற்கொள்வோம் என்று சொல்கிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு சொல்ல வேண்டும். அதனை இல்லை என்று நிரூபிக்க 30 நாள் அவகாசம் இருக்கும். அதன் பிறகு நாம் அளிக்கும் ஆவணங்களை ஏற்காவிட்டாலும், அதன் பிறகும் நம்மால் வாக்காளர் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரையும் எப்படி வாக்களிக்க செய்ய வேண்டும் என்றுதான் தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும். மாறாக எப்படி வாக்களிக்காமல் இருக்க செய்வது என்று சிந்திக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. அப்போது அதில் முறைகேடு நடக்கிறது இல்லையா? பாஜக என்பது மோசடியான கட்சி என்று மக்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் நேரடியாக செய்யாமல், தேர்தல் ஆணையம் மூலமாக செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதே இதை ஏன் செய்யவில்லை.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் தற்போது ஒன்று உறுதியாகிவிட்டது. தேர்தலில் பதிவாகிய வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது உறுதியாகி விட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பார்க்காமல் 2025 தேர்தலின்போது அவரை குடிமகனா என்று பார்ப்பது ஏன்? 2024ஆம் ஆண்டில் இந்திய குடிமகனாக இருந்தவர் 2024ல் எப்படி குடிமகன் இல்லாமல் போனார்? தேர்தல் ஆணையத்திற்கு அவர் இந்திய குடிமகனா என்று உறுதி செய்கிற அதிகாரம் கிடையாது. அப்படி குடியுரிமையில் சந்தேகம் ஏற்பட்டால் நீங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு தான் பரிந்துரைக்க வேண்டும். நம்முடைய அடுத்தக்கேள்வி என்பது பீகார் மண்ணுக்கு சம்பந்தமில்லாத 65 லட்சம் பேர் குடியிருந்தபோது, உள்துறை அமைச்சர் என்ன தூங்கிக் கொண்டிருந்தாரா? பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்க முடியாது? இந்தியாவை ஜனநாயக நாடாக தொடர்வதற்கான தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டியது தேர்தல் ஆணையம். அதன் மீது கேள்வி எழுப்ப முடியாது என்றால் அது பாகிஸ்தானுக்கு கட்டுப்பட்ட அமைப்பா?

மக்களின் ஆதரவை இழந்துவிட்ட மத்திய பாஜக அரசு ஜனநாயகத்திற்கு எதிராக பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியதை தடுத்த நிறுத்த வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும். அதனால் இதை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி கட்சிகள் வரும் 7ஆம் தேதி ராகுல்காந்தி தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளன. இன்றைக்கு பீகார். நாளை தமிழ்நாடு. அடுத்து மேற்குவங்கம்… என்று சொல்கிறபோது, ஒரு கட்டத்தில் இந்த தேர்தலே தேவையில்லை என்கிற இடத்திற்கு பாஜக செல்கிறபோது இந்த நாடு சீரழிந்துவிடும். அதை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது. பாஜக உடன் தத்துவார்த்த ரீதியாக சண்டை போடுவது வேறு. ஆனால் அவர்களின் தத்துவத்தை, கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்கு இருக்கின்ற ஜனநாயக சக்திகளை மறைமுகமாக தங்களின் வெற்றிக்கு பயன்படுத்துகிறார்கள் என்கிறபோது, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நியாயமாகுமா?

நாட்டில் 70 சதவீதம் மக்கள் அன்றாடங்காய்ச்சிகள். அவர்களுக்கு தங்கள் வேலைகளை பார்க்கவே நேரம் போதாது என்கிறபோது, பாஜகவினர் செய்வதை அவர்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அவர்களை இதுகுறித்து யோசிக்க வைக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. நாடு சீரழிகிறது. ஜனநாயக நிறுவனங்கள் எல்லாம், அதன் நோக்கத்திற்கு புறம்பான வேலைகளை பார்க்கிறது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்காக தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ