முதற்கட்டமாக ஜூலை 2023 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1137.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்தது. போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை இது. தமிழக அரசு போக்குவரத்துத்துறையில் கடந்த ஜூன் 2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்கள் மற்றும் தன்னார்வ ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வுதிய பண பலன்களை வழங்கும் வகையில் தமிழக அரசு 265.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
அதே போல தமிழக அரசு போக்குவரத்துத்துறையில் ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரையிலான காலகட்டத்தில் பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தின் ( CPS ) கீழ் அதாவது ( Contributory Pension Scheme) மூலமாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தன்னார்வ ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு CPS பங்களிப்பில் 50 சதவீதம் என்ற வகையில் 40.2605 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஜூலை 2023 முதல் ஜனவரி 2025 வரையிலான காலக்கட்டத்தில் தமிழக அரசு போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் தன்னார்வ ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது உயிரிழந்த ஊழியர்கள் என அவர்களுக்கான ஓய்வு கால பண பலன்களை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசிடம் போக்குவரத்துத்துறை 2450.8375 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என கேட்டு இருந்தது.
நீண்ட காலமாக போக்குவரத்து ஊழியர்களுக்கான பிரச்சனை உள்ளது அதனை தீர்க்கும் பொருட்டு இந்த தொகையை தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டது. அதனை தமிழக அரசு கவனமாக ஆராய்ந்த பிறகு ஜூலை 2023 முதல் ஏப்ரல் 2024 வரை உள்ள காலகட்டத்தில் தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தன்னார்வ ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை வழங்கும் வகையில் முதற்கட்டமாக 1137, 97,00,000 கோடி ரூபாய் ( ஆயிரத்து நூற்று முப்பத்தேழு கோடியே தொண்ணூற்று ஏழு லட்சம் ) வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு ( MTC ) 157.81 கோடி ரூபாயும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ( SETC ) 54.41 கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலத்திற்கு 152.29 கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலத்திற்கு 97.35 கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயமுத்தூர் மண்டலத்திற்கு 153.29 கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலத்திற்கு 235.63 கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலத்திற்கு 141.26 கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்திற்கு 145.93 கோடி ரூபாய் என மொத்தமாக 1137.97 கோடி ரூபாயை போக்குவரத்துத்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் 2023 ஜூலை முதல் வெறுங்கையுடன் ஓய்வு பெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லம் முன்பாக போக்குவரத்து ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2023 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2025 ஆம் ஆண்டு வரையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் போக்குவரத்துத்துறை 2450.8375 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என கேட்டு இருந்தது. அதில் ஜூலை 2023 முதல் ஏப்ரல் 2024 வரை உள்ள காலகட்டத்திற்கான ஓய்வு கால பண பலன்களை வழங்கும் வகையில் முதற்கட்டமாக போக்குவரத்து ஊழியர்களுக்கு 1137.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து தள்ளிப்போகும் ‘கைதி 2’…. ரஜினி – கமல் படத்தை எப்போது தொடங்குவார் லோகேஷ்?