மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு தொடங்கியது.மதுரை பாரபத்தியில் த வெ கவின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. மங்கள இசையடன் தொடங்கிய த.வெ.க மாநாட்டில் பல்லாயிர கணக்கானோா் பங்கேற்றனா். மாநாட்டில் விஜய் நடித்த திரைப்பட பாடல்கள் மேடையில் ஒலிப்பரப்பட்டன. மாநாட்டு மேடைக்கு விஜயின் பெற்றோா்களான எஸ்.ஏ.சந்திரசேகர், சோபா வந்திருந்தனர். இன்று காலை முதலே தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுத் திடலில் இளைஞா்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்காணோா் வருகைபுாிந்தனா். வெயிலின் தாக்கம் இன்று அதிகமாக காணப்பட்டதால், 50-க்கும் மேற்பட்டோருக்கு தலைசுற்றல், வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
வெயிலின் தாக்கத்தால் ஏற்கெனவே 10 போ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலிருந்து மதுரை த.வெ.க மாநாட்டுக்கு தொண்டா் பிரபாகரன் என்பவா் சக்கிமங்கலம் பிரிவு நான்கு வழி சாலையில் வந்துக் கொண்டிருந்த போது, மாரடைப்பால் மரணம் அடைந்தாா். மாநாட்டிற்கு வந்துக் கொண்டிருந்த தொண்டா் இறந்தது அனைவாிடையேயும் பெரும் சோகத்தையும், அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சாிக்கையாக மாநாட்டு திடலில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
