spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

-

- Advertisement -

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு தொடங்கியது. த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…மதுரை பாரபத்தியில் த வெ கவின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. மங்கள இசையடன் தொடங்கிய த.வெ.க மாநாட்டில் பல்லாயிர கணக்காணோா் பங்கேற்றனா். மாநாட்டில் விஜய் நடித்த திரைப்பட பாடல்கள் மேடையில் ஒலிப்பரப்பட்டன. மாநாட்டு மேடைக்கு விஜயின் பெற்றோா்களான எஸ்.ஏ.சந்திரசேகர், சோபா வந்திருந்தனர். இன்று காலை முதலே தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுத் திடலில் இளைஞா்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்காணோா் வருகைபுாிந்தனா்.  வெயிலின் தாக்கம் இன்று அதிகமாக காணப்பட்டதால், 50-க்கும் மேற்பட்டோருக்கு தலைசுற்றல், வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மாநாட்டுத் திடலிலேயே அமைக்கப்பட்டிருந்த அவசரகால சிகிச்சை மையங்களில் முதல் உதவி அளிக்கப்பட்டது.த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…மதுரையில் த. வெ. க மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தரை விரிப்புகளை எடுத்து தலைக்கு மேல் கூடாரம் போல பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். இதனை போல் நாற்காலிகளை தூக்கி கொண்டு நிழலை தேடி அலைந்தனர். மதுரை பாரபத்தியில் மாநாட்டு திடலில் விஜயை தொண்டர்கள் நெருங்க விடாமல் தடுப்பதற்காக ”ரேம்ப் வாக்” செல்லும் பாதையில் பல அடி உயரத்திற்கு இரும்பு தடுப்பு பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி தொண்டர்கள் ஏறி வந்து விடாமல் இருக்க இரும்பு கிரில்கள் மீது த.வெ.க நிர்வாகிகள் கிரீஸ் தடவினா்.

மேலும், மதுரை த.வெ.க மாநாட்டில் குவிந்துள்ள இளைஞர்கள் ஸ்பீக்கர்கள் உள்ள மர கோபுரம் மீது ஏறி ஆரவாரம் செய்தனா். த.வெ.க மேடையில் விஜயின் பெற்றோர்கள் பங்கேற்றனா். இன்னும் சற்று நேரத்தில் விஜய் வர இருக்கிறாா் என்ற அறிவிப்பு வெளியானது.

எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!

we-r-hiring

MUST READ