Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ்.... அவல் கட்லெட் செய்வது எப்படி?

சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ்…. அவல் கட்லெட் செய்வது எப்படி?

-

- Advertisement -

அவல் கட்லெட் செய்வது எப்படி?அவல் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

அவல் – 2 கப்
உருளைக்கிழங்கு – 2
பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – அளவு

செய்முறை:

அவல் கட்லெட் செய்வதற்கு உருளைக்கிழங்கை முதலில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதனை தோலுரித்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் இரண்டு கைப்பிடி அளவு அவலை எடுத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

மீதி இருக்கும் அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மாவினை விரும்பிய வடிவில் கட்லெட்டிற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின் சோளமாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் தோசை கல்லில் எண்ணெய் தடவி வைக்க வேண்டும்.அவல் கட்லெட் செய்வது எப்படி?

பின் செய்து வைத்த கட்லெட்டுகளை சோளமாவில் தோய்த்து , அவல் பொடியில் பிரட்டி தோசை கல்லில் போட்டு பொன்னிறமாக வெந்து வரும் வரை வேக விட்டு எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான அவல் கட்லெட் ரெடி. இதனை குழந்தைகளுக்கு மாலை உணவாக கொடுக்கலாம். வீட்டிலேயே செய்வதனால் மிகவும் ஆரோக்கியமானது. ஆகவே நீங்களும் ஒருமுறை இதை உங்களது வீட்டில் செய்து பாருங்கள்.

MUST READ