Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்டேட்டா இல்லாமல் மலிவு விலை ப்ளான் கட்டாயம் – TRAI புதிய பரிந்துரை…

டேட்டா இல்லாமல் மலிவு விலை ப்ளான் கட்டாயம் – TRAI புதிய பரிந்துரை…

-

- Advertisement -

MOBILE DATA அல்லாத குரல் அழைப்புகள் மற்றம் எஸ்.எம்.எஸ். வசதிகளை மட்டும் வழங்கும், மலிவு விலையிலான ப்ளான்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டாயமாக அளிக்க வேண்டும் என TRAI பரிந்துரைத்துள்ளது.டேட்டா இல்லாமல் மலிவு விலை ப்ளான் கட்டாயம் – TRAI புதிய பரிந்துரை…மொபைல் சேவைகளை எளிமையாகவும் மலிவாகவும் மக்களுக்கு வழங்கும் நோக்கில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) முக்கிய பரிந்துரையை முன்வைத்துள்ளது. அதன்படி, குரல் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வசதிகள் மட்டுமே கொண்ட, மொபைல் டேட்டா சேர்க்கப்படாத குறைந்த விலை திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் பெரும்பாலான மொபைல் திட்டங்களில் டேட்டா சேவைகள் இணைக்கப்பட்டிருப்பதால், அவற்றைப் பயன்படுத்தாத பல பயனாளர்கள் தேவையற்ற கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, மூத்த குடிமக்கள் மற்றும் அடிப்படை பயன்பாட்டுக்காக மட்டும் மொபைல் பயன்படுத்தும் பயனாளர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

we-r-hiring

இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, டேட்டா இல்லாத குரல் மற்றும் எஸ்.எம்.எஸ். வசதிகள் கொண்ட தனித்திட்டங்களை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை மட்டுமே குறைந்த கட்டணத்தில் தேர்வு செய்யும் வசதி கிடைக்கும்.

இந்த பரிந்துரை அமலுக்கு வந்தால், மொபைல் பயன்பாட்டில் அதிக நெகிழ்வுத்தன்மையும், செலவு குறைப்பும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் ரீசார்ஜ்: 28 நாட்கள் காலாவதி முறைக்கு முற்றுப்புள்ளி? நாடாளுமன்றத்தில் ராகவ் சதா ஆவேசப் பேச்சு!

MUST READ