spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆண்களே... இதை மட்டும் கவனிக்காமல் விட்டுறாதீங்க!

ஆண்களே… இதை மட்டும் கவனிக்காமல் விட்டுறாதீங்க!

-

- Advertisement -

ஆண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவைகளில் ஒன்று மார்பு வலி. இது பொதுவாக இதயம் தொடர்பான பிரச்சனைகளுடன் சம்பந்தப்பட்டவை ஆகும்.ஆண்களே... இதை மட்டும் கவனிக்காமல் விட்டுறாதீங்க! மார்பு வலி என்பது பல்வேறு காரணங்களை கொண்டிருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே ஆண்கள் மார்பு வலியை புறக்கணிக்கக் கூடாது. ஆண்கள் மார்பில் ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது மிகவும் நல்லது.

அதேசமயம் ஆண்கள் சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தமும் கலந்து வருவது போன்ற அறிகுறிகளையும் கவனிக்காமல் இருக்கக்கூடாது. இந்த அறிகுறிகள் சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு காரணமாக அமையலாம். அதுமட்டுமில்லாமல் சிறுநீரக கற்கள், ப்ரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளின் அறிகுறியாக கூட இருக்கலாம்.ஆண்களே... இதை மட்டும் கவனிக்காமல் விட்டுறாதீங்க! ஆகவே உடம்பில் எந்த பிரச்சனை இருந்தாலும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை விரைவில் மேற்கொள்ளுதல் அவசியம்.

we-r-hiring

அடுத்ததாக ஆண்கள் கவனிக்க வேண்டியது, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம் வருவது போன்றவை தான். இந்த அறிகுறிகள் இருப்பின், அவை இரைப்பை குடல் பிரச்சனையை உண்டாக்க கூடும். மேலும் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கக்கூடும். ஆகவே ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை பெறுதல் நல்லது.ஆண்களே... இதை மட்டும் கவனிக்காமல் விட்டுறாதீங்க!இன்றுள்ள அவசர காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் கூட இது போன்ற பல பிரச்சனைகள் உண்டாகக்கூடும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்று. எனவே நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது சிறந்த வழியாகும்.

MUST READ