Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வாழவைக்கும் வாழைக்கனி..... கரு உற்பத்திக்கு சிறந்த தீர்வு!

வாழவைக்கும் வாழைக்கனி….. கரு உற்பத்திக்கு சிறந்த தீர்வு!

-

வாழவைக்கும் வாழைக்கனி..... கரு உற்பத்திக்கு சிறந்த தீர்வு!வாழைக்கனி என்பது முக்கனிகளில் முதன்மையானதாகும். இவை எளிதில் கிடைக்கக்கூடியது. அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாழைக் கனியை விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழங்களில் நிறைய வகை இருக்கிறது. நாட்டு வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கற்பூரவள்ளி, நேந்திரம் பழம் என பல வகைகள் உண்டு. இவை அனைத்துமே ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். அந்த வகையில் வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்றவை அடங்கியுள்ளன. மேலும் வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. எனவே வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதனால் மலச்சிக்கல் தீரும். செவ்வாழைப்பழம், கருமுட்டை வளர்ச்சிக்கு உதவியாகவும் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வாகவும் பயன்படுகிறது.
வாழவைக்கும் வாழைக்கனி..... கரு உற்பத்திக்கு சிறந்த தீர்வு! எனவே செவ்வாழைப்பழமும் பாலும் தினமும் இரவில் 28 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் நல்லது. மேலும் இந்த வாழைப்பழம் நரம்புகளை சீராக வைக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இதை பெருங்குடலை சுத்தமாக வைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினம் ஒரு வாழைப்பழம் உண்பதால் குடல் இயக்கம் சீராக இருக்கும். வாழைப்பழமானது மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆகையால் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் ஆரோக்கியமாக வாழலாம்.

வாழைப்பழங்கள் சில பேருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே அவர்கள் வாழைப்பழங்களை தவிர்ப்பது நல்லது.

MUST READ