Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!

பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!

-

கோதுமையில் வைட்டமின் ஈ, செலினியம் போன்றவை அடங்கியுள்ளது. அதேசமயம் கோதுமையை தினமும் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள கழிவுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும். குறிப்பாக இதில் அதிக அளவிலான நார் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!

நார்ச்சத்து என்பது அனைத்து மனிதர்களுக்கும் தேவையானதாகும். ஏனெனில் நாம் நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட்டால் மட்டுமே செரிமானம் சீரடைந்து மலச்சிக்கல் பிரச்சனை தீரும். ஆகவே பலரும் கோதுமை மாவில் சப்பாத்தி செய்து சாப்பிடுகின்றனர். அதிலும் பழைய சப்பாத்தியில் நார் சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். உடனடியாக செய்த சப்பாத்தியில் இருக்கும் நார்ச்சத்தை விட பழைய சப்பாத்தியில் இருக்கும் ஸ்டார்ச் உடைந்து நார்ச்சத்தாக மாறுகிறது. அத்துடன் சப்பாத்தியை செய்த உடனே சாப்பிடும் போது அதில் கலோரி அதிகமாக இருக்கும். பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!ஆனால் அந்த சப்பாத்தி பழையதாக மாறும் போது கலோரியை குறைத்து விடுகிறது. இதனால் பழைய சப்பாத்தியை நாம் எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை குறைகிறது. அதுமட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வருகிறது.

பழைய சப்பாத்தியை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பத்து முதல் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராக இருப்பதை காணலாம்.

MUST READ