Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சீத்தா பழத்தில் ஒளிந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

சீத்தா பழத்தில் ஒளிந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

-

சீத்தா பழத்தில் வைட்டமின் சி போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதில் தேவையான அளவு பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சீத்தா பழம் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. அந்த வகையில்சீத்தா பழத்தை ஜூஸ் செய்து அதில் சிறிதளவு பால் மற்றும் தேன் கலந்து குடித்து வர உடல் எடை குறைவதை காணலாம்.சீத்தா பழத்தில் ஒளிந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

அது மட்டும் இல்லாமல் இது உடலுக்கு குளிர்ச்சியை தந்து உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.

மேலும் இந்த சீத்தா பழத்தை கர்ப்ப காலத்தில் போது அடிக்கடி எடுத்துக் கொள்வதால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். அதே சமயம் கருச்சிதைவு ஏற்படாமலும் தடுக்கலாம்.சீத்தா பழத்தில் ஒளிந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

சீத்தா பழத்தில் வைட்டமின் பி6 அதிகம் இருப்பதால் மூச்சுக்குழாய் அலற்சி குறைந்து ஆஸ்துமா நோய் தடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சீத்தா பழத்தில் உள்ள மெக்னீசியம் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சீத்தா பழத்தில் அதிக அளவிலான நார்ச்சத்து இருப்பதால் இது செரிமானத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கலை தீர்க்கவும் பயன்படுகிறது.சீத்தா பழத்தில் ஒளிந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சீத்தா பழம் அருமருந்தாக பயன்படுகிறது. அதாவது டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீத்தா பழத்தை சாப்பிடுவதனால் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தலாம்.

இது தவிர சீத்தா பழத்தில் எண்ணற்ற பயன்கள் இருக்கிறது. அதன்படி இது கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தவும், வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

இருப்பினும் சீத்தா பழத்தினால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுவது போல் தோன்றினால் உடனடியாக அதனை தவிர்த்து விடுங்கள். மேலும் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

MUST READ