பொதுவாகவே யாரும் இனிப்பு அதிகமாக சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக இனிப்பு எடுத்துக் கொள்வதனால் கெட்ட கொழுப்புகள் உற்பத்தியாகி உடல் பருமனை உண்டாக்குகிறது. அதே சமயம் சர்க்கரை நோய்க்கும் இது காரணமாக அமைகின்றன என்று சொல்லப்படுகிறது. எனவே பெரும்பாலானவர்கள் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு பிரவுன் சுகரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரவுன் சுகரானது சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் முகத்தை பளபளப்பாகவும் உதவுகிறதாம். அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.
முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பிரவுன் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேன், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் வரை மெது மெதுவாக மசாஜ் செய்து வர முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் குறைந்து இளமையான தோற்றமளிக்கும்.
அடுத்ததாக ஒரு கப் அளவு பிரவுன் சுகர், ஒரு ஸ்பூன் அளவு வெண்ணிலா எசன்ஸ், அரை கப் அளவு ஆலிவ் ஆயில், இரண்டு முதல் மூன்று சொட்டு வைட்டமின் ஈ எண்ணெய் ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலக்கி இந்த கலவையை ஸ்கிரப் ஆக பயன்படுத்தலாம். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தி வர முகம் பொலிவடையும். வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை மென்மையாக மாற்றிவிடும். எனவே நீங்களும் இம்முறைகளை பின்பற்றிப் பாருங்கள்.
மேலும் இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.