spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நீரழிவு நோயை குணப்படுத்துமா நாவல் பழம்?

நீரழிவு நோயை குணப்படுத்துமா நாவல் பழம்?

-

- Advertisement -

நீரழிவு நோயை குணப்படுத்தும் நாவல் பழம்!நாவல் பழத்தில் இரும்பு சத்து , கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நாவல் மரத்தில் இருக்கும் பழம், இலை, மரப்பட்டை, விதை போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் உடையது.

நாவல் மர இலைகளை நசுக்கி சாறு எடுத்து காலை மாலை என இரண்டு வேளைகள் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் பேதியை குணப்படுத்தலாம். மேலும் இவை ரத்த சோகை நோயை குணப்படுத்தவும், மலச்சிக்கலை சரி செய்யவும் பித்தத்தை தணிக்கவும் உதவுகிறது.

we-r-hiring

நாவல் பழமானது மண்ணீரல் கோளாறுகளை சரி செய்யவும் சிறுநீரகக் கற்களை கரைக்கவும் பயன்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த நாவல் பழம் இன்று பலரையும் ஆட்டி படைத்து வரும் நீரழிவு நோயையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

நீரழிவு நோய் உள்ளவர்கள் நாவல் பழ விதைகளை இடித்து அதில் இருந்து எடுக்கப்பட்ட தூளை நாள்தோறும் ஒரு கிராம் வீதம் தண்ணீரில் கலந்து காலை மாலை என இரு வேலைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீர்ப்போக்கு குறையும்.நீரழிவு நோயை குணப்படுத்துமா நாவல் பழம்?

நாவல் பழச்சாற்றை நாள்தோறும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டால் நீரழிவு நோயாளியின் சர்க்கரை அளவு 15 நாட்களில் 10% குறைந்து இருப்பதை காணலாம். மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்.

இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். மேலும் இந்த நாவல் பழத்தை சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகிய பின் சாப்பிட வேண்டும்.

MUST READ