spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடல் சூட்டை தணிக்கும் ஆமணக்கு எண்ணெய்..... எப்படி பயன்படுத்துவது?

உடல் சூட்டை தணிக்கும் ஆமணக்கு எண்ணெய்….. எப்படி பயன்படுத்துவது?

-

- Advertisement -

வெயில் காலம் என்பது பொதுவாகவே ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகமாக இருக்கும். ஆனால் இப்பொழுது வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கி விடுகிறது. இதனால் பல சரும பிரச்சனைகள் உண்டாகின்றன. உடல் சூட்டினால் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது.

உடல் சூட்டை தணிக்கும் ஆமணக்கு எண்ணெய்..... எப்படி பயன்படுத்துவது?

we-r-hiring

எனவே வெயில் காலங்களில் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் உடலில் பித்தம் அதிகரிக்கும் காரணத்தாலும் உடலின் சூடு அதிகமாகி விடுகிறது. ஆகவே உடல் சூட்டை தணிக்க இரவில் ஆமணக்கு எண்ணையை உள்ளங்கைகளில் தடவி விட்டு தூங்கலாம். இவ்வாறு தொடர்ந்து செய்துவர உடல் சூடு தணியும்.

அதேசமயம் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் உண்டாகும் அடி வயிற்று வலியை குணப்படுத்த வயிற்றில் விளக்கெண்ணையை தடவ வேண்டும். ஆமணக்கு இலைகளை வதக்கி அதனை வயிற்றின் மேல் வைத்து கட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிகமாக பால் சுரக்க வேண்டும் என்றால் ஆமணக்கு இலையை தண்ணீரில் சேர்த்து காய்ச்ச வேண்டும். பின்னர் மிதமான சூட்டில் இருக்கும் போது அந்த தண்ணீரை தொட்டு மார்பில் ஒத்தடம் கொடுத்து வர வேண்டும். அல்லது ஆமணக்கு இலையை அடக்கி மார்பில் கட்டி வர பால் சுரப்பு அதிகமாகும்.உடல் சூட்டை தணிக்கும் ஆமணக்கு எண்ணெய்..... எப்படி பயன்படுத்துவது?இருப்பினும் இம்முறைகளை பின்பற்றுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ