Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மஞ்சள் காமாலை ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

மஞ்சள் காமாலை ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

-

வயதான இரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் அளிக்கப்படும் சமயத்தில் பிலிருபின் என்ற நிறமி உடலில் உற்பத்தி ஆகிறது. இது மலம், சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ பித்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ இந்த பிலிருபின் உடலிலேயே தங்கி விடுகிறது இதனால் உடலில் மஞ்சள் நிறம் உண்டாகிறது. மது அருந்துவதாலும் ஹெபடைடிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.மஞ்சள் காமாலை ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

சாக்கடை நீர் கலந்த குடிநீரை குடிப்பவர்களுக்கு இந்த ஆபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதாலும் இந்நோய் உண்டாகிறது.

மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க

முதலில் மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.மஞ்சள் காமாலை ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

எந்த ஒரு பொருளை சாப்பிடுவதற்கு முன்போ அல்லது பிறகோ கைகளை சுத்தமாக கழுவுவது நல்லது.

காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.

கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக்கூடாது சமைக்கவும் கூடாது. கழிவறையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

நகம் வளர்ப்பது, நகம் கடிப்பது கூடாது.

மற்றவர்களின் சேவிங் செட்டை பயன்படுத்துதல் கூடாது.மஞ்சள் காமாலை ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

நேரத்திற்கு சாப்பிடுவதும், எளிதில் ஜீரணம் ஆகும் பொருட்களை சாப்பிடுவதும் மிக முக்கியமானது.

இருப்பினும் மருத்துவரின் பரிந்துரைப்படி உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது. அது மட்டும் இல்லாமல் மஞ்சள் காமாலையின் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ