spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத ஷாம்பு செய்யலாம்!

வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத ஷாம்பு செய்யலாம்!

-

- Advertisement -

அந்த காலத்தில் கெமிக்கல் இல்லாத பொருட்களை பயன்படுத்தியதால் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். கெமிக்கல் இல்லாத பொருட்களை பயன்படுத்தி தான் சருமத்தையும் முடியையும் பாதுகாத்தனர்.வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத ஷாம்பு செய்யலாம்! ஆனால் இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பல கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி நாம் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. எனவே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியத்தை பேணலாம். அந்த வகையில் தற்போது வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத ஷாம்பு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

we-r-hiring

வெந்தயம் – ஒரு கைப்பிடி அளவு
சீரகம் – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத ஷாம்பு செய்யலாம்!

ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அத்துடன் ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தையும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் இந்த கலவையுடன் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல் தயார் செய்ய வேண்டும். மேலும் இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் இந்த கலவையை தேவையான அளவில் எடுத்து தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்து தண்ணீரால் கழுவ வேண்டும். ஷாம்பு எதுவும் பயன்படுத்த தேவையில்லை. இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.

கிடைக்கும் பயன்கள்வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத ஷாம்பு செய்யலாம்!

இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்தல் குறைந்து முடி மென்மையாக மாறும். அரிப்பு, பொடுகு தொல்லையும் தீரும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ