தேங்காய் தண்ணீரானது உடல் எடையை குறைக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாகவே தேங்காயில் புரதம் செலினியம் சத்துக்கள் ஆகியவை அடங்கியுள்ளது. இதில் இருக்கும் நீர் சத்துக்கள் சருமத்தின் வறட்சியை போக்கி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதேபோல் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கும் தேங்காய் தீர்வு தரும். மேலும் தேங்காய் எண்ணெய்யும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பல்வேறு வழிகளில் பலன் அளிக்கும். அதேபோல் தேங்காய் தண்ணீரும் உடலுக்கு உயிரற்றத்தை தரும். இதன் மூலம் பல நன்மைகளும் கிடைக்கிறது. அதாவது தேங்காய் தண்ணீரில் சிறிதளவு சப்ஜா விதைகளை போட்டு அந்த தண்ணீரை குடித்து வர உடல் எடை குறையும். சப்ஜா விதைகள் நம் உடல் சூட்டை தணிக்க கூடியது. இதில் புரோட்டின் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக இருக்கிறது. சப்ஜா விதைகளை எடுத்துக்கொண்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். எனவே ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கலாம். சப்ஜா விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் இது உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அது மட்டும் இல்லாமல் செரிமான பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு தரும்.
அடுத்தது தேங்காய் தண்ணீர் மற்றும் சப்ஜா விதைகள் ஆகிய இரண்டும் ரக்கத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அத்துடன் அதிகமாக இருக்கும் கொலஸ்ட்ரால் அளவும் குறையக்கூடும். எனவே அடிக்கடி தேங்காய் நீரில் சப்ஜா விதைகளை போட்டு சாப்பிட்டு வர கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
இருப்பினும் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.