Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தமா?

மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தமா?

-

மலச்சிக்கல் என்பது பொதுவான பிரச்சினை தான் ஆனால் அதை நார்மல் என்று சொல்ல முடியாது நிச்சயம் அது அப்னார்மல் தான். தினமும் நம் உடல் கழிவுகளை வெளியேற்றினால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதன்படி வாரத்திற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால் அதனை மலச்சிக்கல் என்கிறோம்.மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தமா?

மன அழுத்தத்தில் இருக்கும் போதும் சரியாக தண்ணீர் குடிக்காததாலும் இந்த மலச்சிக்கல் உண்டாகிறது. மன அழுத்தத்தின் சமயத்தில் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் நம் உடலில் அதிகரிக்கத் தொடங்கி குடல்களின் இயக்கத்தை குறைக்கிறது. இதன் காரணமாக செரிமான கோளாறுகள் ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. அதேசமயம் நம் உடலில் உள்ள நார்ச்சத்து குறைய தொடங்கினாலும் மலச்சிக்கல் உண்டாகும். உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டாலும் இந்த பிரச்சனை உண்டாகிறது.

மன அழுத்தத்தின் காரணமாக நாம் தண்ணீர் குறைவாக குடிப்பதும், மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகும். மேலும் நம் உடலுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருந்தால் நாம் சாப்பிட்ட உணவுகள் விரைவில் ஜீரணம் ஆகாது. மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தமா?இதனாலும் மலச்சிக்கல் உண்டாகிறது. அதேசமயம் மன அழுத்தத்தில் சாப்பிடாமலோ அல்லது தண்ணீர் குடிக்காமலோ இருப்பது நம் உடலுக்கு நல்லது கிடையாது. இது செரிமான செயல்முறையை பாதிக்கிறது. ஆகவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட தினமும் யோகா தியானம் போன்றவற்றை பின்பற்றுங்கள்.

இருப்பினும் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது .

MUST READ