spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!

-

- Advertisement -

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!மூலிகை வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று சிறுகுறிஞ்சான். இந்த சிறுகுறிஞ்சான் இலைகளை தினசரி மூன்று முதல் ஐந்து கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இவை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாகவே மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வேலிகளில் பொடியாக படர கூடியது. இதை கசப்பு சுவை உடையதாக இருக்கும். பிறந்த போதிலும் முழு தாவரமுமே அதிக மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த சிறு குறிஞ்சான் இலைகள் உடல் பருமன் , இரைப்பை பிரச்சனை, வாதம், நரம்புத் தளர்ச்சி போன்றவைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் சிறுகுறிஞ்சான் என்பது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது. இதற்கு சர்க்கரைக்கொல்லி என்ற இன்னொரு பெயரும் உண்டு. இந்த சிறு குறிஞ்சான் மூலிகை வயிற்றில் உள்ள சதையை தூண்டி இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. நீரழிவு நோய் உள்ளவர்கள் குறிஞ்சான் இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் ஒரு கிராம் அளவில் காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!

we-r-hiring

மேலும் இதன் இலைகளை பொடி செய்து பசும்பாலில் சேர்த்து சாப்பிடுவதனால் நரம்பு சம்பந்தமான குறைபாடுகளை சரி செய்யலாம். அத்துடன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினையும் கட்டுப்படுத்தலாம்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையில் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ