Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முருங்கைக்கீரை பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

முருங்கைக்கீரை பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

-

முருங்கைக்கீரை பொரியல்:

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – 2 கப்
முட்டை – 3
உப்பு – தேவைக்கேற்ப
வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு, உளுத்தம் பருப்பு – தேவைக்கேற்ப
கடலைப்பருப்பு – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் துருவல் – அரை கப்முருங்கைக்கீரை பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவிற்கு வதங்கிய பிறகு பூண்டினை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது முருங்கைக் கீரையை நன்கு அலசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

முருங்கைக்கீரை நன்கு வெந்த பிறகு கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றி மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.முருங்கைக்கீரை பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

இப்போது முருங்கைக்கீரை முட்டை பொரியல் தயார். இந்த முருங்கைக் கீரை நாம் வழக்கமாக செய்யும் முருங்கைக் கீரையை விட கூடுதல் சுவையை தரும். கீரை சாப்பிட விரும்பாதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

MUST READ