முடி வறட்சி ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் பின்வருமாறு.
இன்றைய தலைமுறையினர்கள் ஸ்டைல் என்ற பெயரில் தலைமுடியை முறையாக பராமரிப்பது இல்லை. அதாவது அந்த காலத்தில் இருந்த எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் நாளடைவில் மறைந்து விட்டது. எண்ணெய் தேய்ப்பதனால் முகத்தில் எண்ணெய் வடியும் என்பதற்காகவே தலை முடியில் எண்ணெய் வைப்பதில்லை. அதே சமயம் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ வகைகளை பயன்படுத்துவதாலும் தலையில் உள்ள இயற்கையான ஈரப்பதம் குறைந்து முடி வறட்சி ஏற்படுகிறது. எனவே இதெல்லாம் இயற்கையான வழிகளில் சரி செய்யலாம்.
1. முதல் நாள் இரவில் சிறிதளவு வெந்தயத்தை நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அடுத்த நாள் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிர் சேர்த்து தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
2. மேலும் தேங்காய் எண்ணெயுடன் அரைத்த கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி வடிகட்டி அதனை வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இது முடி வறட்சியை தடுக்கும்.3. அடுத்தது கற்றாழை, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
இவ்வாறு இயற்கையான வழிகளை பயன்படுத்துவதனால் முடி வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும். முடி வறட்சியினால் தான் பொடுகு தொல்லை, அரிப்பு போன்ற பிரச்சனைகளும் உண்டாகும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.